Wednesday, June 15, 2005

புது வலைப்பதிவர்க்கு TOP 10 HOT TOPICS !

நீங்கள் தமிழ் வலைப்பதிவுகள் வாயிலாக உலகப் பிரசித்தி பெறவும், உங்கள் பதிவுகள் கவனிக்கப்படவும், தங்களுக்கு அதிக வாசகர்கள் மற்றும் பின்னூட்டங்கள் கிடைக்கவும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஒன்றை பற்றி உங்களது கருத்துக்களை எழுதுவது தான் !!! நீங்கள் துரிதமாக பிரபலமடைய / புகழ் பெற (15 நிமிடம் அல்ல!) இதுவே சிறந்த வழி என்று தெளிவது அவசியம் :)

10. கலாச்சார சீரழிவு மற்றும் நவீனப் பெண்ணியம்
9. இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சினை
8. தமிழ் குடிதாங்கிகளின் செயல்பாடுகள் ... மொழிப்போர் கலாட்டா
7. தினமலர் ஆதரவு அல்லது எதிர்ப்பு
6. ரோசாவசந்த் / டோண்டு / PKS அவர்களின் ஏதாவது ஒரு பதிவின் பின்னூட்டக் களத்தில், ஒரு நிலைப்பாட்டை எடுத்து, படு காட்டமாக விவாதம் செய்வது !!!
5. தமிழக வாரிசு (பா.ம.க, தி.மு.க) அரசியல் !
4. ரஜினி குறித்து விமர்சனம்
3. பெரியார் குறித்து விமர்சனம்
2. பழம் / நவ பார்ப்பனீயம் குறித்த அலசல்
1. விடுதலைப்புலிகள் எதிர்ப்பு


எச்சரிக்கை: மேற்கூறியவற்றை குறித்து எழுதுவதற்கு முன், அவை பற்றி ஓரளவு படித்துத் தெளிவது நல்லது !!! இல்லையெனில் Subject Experts உங்களை பந்தாடி விடுவார்கள் !!!

DISCLAIMER: இந்த தலைப்புகளை வைத்து நீங்கள் எழுதுவதால் உங்களுக்கு ஏற்படக்கூடிய மனஉளைச்சலுக்கோ, இன்னபிற உபாதைகளுக்கோ, சங்கடங்களுக்கோ(!) நீங்களே பொறுப்பாவீர்கள். உதாரணமாக, அனாமதேயங்கள் வசை பாடலாம், உங்கள் பெயரிலேயே போலிகள் பல பதிவுகளில் பின்னூட்டி பெயரைக் கெடுக்கலாம் !!!

Anyway, Try your luck and ALL THE BEST ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

13 மறுமொழிகள்:

குழலி / Kuzhali said...

இன்னொன்னையும் சேத்துக்கோபா புது TOP 10 HOT TOPICS ! பற்றி பதிவு போடுவது....

யின்னாபா நாஞ்சொல்றது கரீக்டா?

said...

unmai... unmai.. unmai.. :))

innoru topic vitupattuvittathu - Je.Kaa, a.mi & castism.

Vinobha.

நற்கீரன் said...

:-)

முகமூடி said...

"எழுத்தின் மூலம் எழுதியவரின் ஜாதி கண்டுபிடிக்கும் சக்தி" கொண்ட படை கூட்டமாக விடும் பின்னூட்டங்களில் என்னோடது தொலைஞ்சி போறதுக்கு முன்னாடி ஒரு பின்னூட்டம் போட்டுடறேன். சோக்காகீதுப்பா லிஸ்டு... (லிஸ்ட்ல இல்லாததா புலிகளை பத்தி நான் ஒரு பதிவு போட்டுறுக்கேன் பாத்துட்டு சொல்லுங்க)

அல்வாசிட்டி.சம்மி said...

ஹம்ம் வேலைய ஆரம்பிச்சாச்சா? சரி உங்க பட்டியல்ல விடுபட்டது...

ஒரு மதத்தை கேவலப்படுத்துவது எப்படி?

இதையும் சேத்துக்கோங்க.

enRenRum-anbudan.BALA said...

குழலி, வினோபா, நற்கீரன், முகமூடி, அ.சி.சம்மி, கருத்திட்டதற்கு நன்றி !!!

குழலி,
//புது TOP 10 HOT TOPICS ! பற்றி பதிவு போடுவது....
//
நான் சொன்னது புது வலைப்பதிவர்க்கு -- எனக்கு அல்ல !

வினோபா,
//innoru topic vitupattuvittathu - Je.Kaa, a.mi & castism.
//
நீங்கள் குறிப்பிட்டது, பாயிண்ட் 2-இல் (sub-topic ஆக!) வந்து விடும் :)

//(லிஸ்ட்ல இல்லாததா புலிகளை பத்தி நான் ஒரு பதிவு போட்டுறுக்கேன் பாத்துட்டு சொல்லுங்க)
//
புலிகள் பற்றிய உங்களது "எல்லா" பதிவுகளையும் படித்தேன் ! புலி என்றாலே எனக்கு குலை நடுங்கும் பயம் என்பதால், அந்த ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் "ஜூட்" விட வேண்டியதாகி விட்டது ;-) "புலிகளின் மூர்க்க குணம்" பற்றி (சரியான சமயத்தில்) எழுதிய உங்களை பாராட்டத் தான் வேண்டும் :))))))))

அ.சி.சம்மி,
//ஒரு மதத்தை கேவலப்படுத்துவது எப்படி?
//
நீங்கள் குறிப்பிடுவது, நான் சொன்ன பாயிண்டுகள் 10, 6, 5, 3, 2 ஆகியவற்றில் சில சமயங்களில் தலை காட்டும் ;-)

துளசி கோபால் said...

ஷ்ரேயா, உங்க பதிவைப் பார்க்க முடியலையேன்னு புலம்பியிருக்காங்க. அதாலே இங்கே என்னாவோ நடக்குதுன்னு வேடிக்கை பாக்க வந்தேன்.

????( நானே போட்டுக் கிட்டேன்)
என்றும் அன்புடன்,
துளசி.

Moorthi said...

பாலா,

பயனுள்ள யோசனைகள். புது பதிவருக்கு மட்டுமல்ல.. பழைய பதிவருக்கும் பயன்படலாம்!(ஹிஹிஹி)

வீ. எம் said...

முக்கியமா ஒரு மேட்டர விட்டுடீங்களே love milk அப்புபுபுபு.....

" செயகாந்தன்"

"காந்த்" நு முடிந்தாலே அப்படிதான் போல !

வீ எம்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

Thanks to Gopi, Shreya was here!! All I had to do was encode the URL. ie: instead of the underscore, used %5
:o)
>>Shreya<<

enRenRum-anbudan.BALA said...

துளசி அக்கா,
???? --- எள்ளல் ஜாஸ்தி தான் :)

மூர்த்தி,
நன்றி !

வீ.எம்,
//"காந்த்" நு முடிந்தாலே அப்படிதான் போல !//
குசும்பு, ம்ம்ம்ம் ;-) அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல, அப்பு !!!

ஷ்ரேயா,
உங்கள் பிரச்சினை தீர்ந்தது குறித்து மகிழ்ச்சி !!! அதென்ன %5 ????

எ.அ. பாலா

said...

ஒரு வேளை எல்லாரும் 4.5% பால் குடிக்கும் போது நீங்க மட்டும் 5% பால் குடிக்கறீங்களா பாலா? (ஹி.ஹி. ச்சும்ம்மா, காமெடி)

அது %5fங்க, _ க்கு URL Encode மதிப்பு.

அதாவது உங்க வலைப்பூவின் சுட்டி

http://balaji%5fammu.blogspot.com/

enRenRum-anbudan.BALA said...

nanRi, Gopi for helping Shreya and thanks for the explanation too !!!!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails